சபாநாயகர் 'ஊடாக' மாத்திரமே கோட்டா பேசுவார் - sonakar.com

Post Top Ad

Monday, 11 July 2022

சபாநாயகர் 'ஊடாக' மாத்திரமே கோட்டா பேசுவார்

 



உடனடியாக பதவி விலகுவதைத் தவிர்த்து 13ம் திகதிக்கு நாள் குறித்திருந்த கோட்டாபய ராஜபக்ச, நாட்டு மக்களுக்கு 'உரை' யாற்றுவதையும் தவிர்த்துக் கொள்ளவுள்ளார்.


இந்நிலையில், அவரது செய்திகள் எதுவாக இருந்தாலும் அது சபாநாயகர் ஊடாக மாத்திரமே எத்தி வைக்கப்படும் எனவும் அவரே பதவி விலகவுள்ள ஜனாதிபதியின் தூதர் எனவும் ஜனாதிபதி அலுவலகம் விளக்கமளித்துள்ளது.


தலைமறைவாக உள்ள கோட்டாபய ராஜபக்ச, ஏலவே நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் ஊகங்கள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment