ஜனாதிபதியின் கூட்டத்தை நிராகரித்த ஆளுங்கட்சி - sonakar.com

Post Top Ad

Wednesday, 6 July 2022

ஜனாதிபதியின் கூட்டத்தை நிராகரித்த ஆளுங்கட்சி

 



ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை 'பேச' வருமாறு ஜனாதிபதி விடுத்திருந்த அழைப்பினை பெரும்பாலான பெரமுன உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.


மஹிந்த, நாமல் ஆகியோருடன் சிலர் நேற்றைய சந்திப்பில் கலந்து கொண்டுள்ள போதிலும் பெரும்பாலானோர் குறித்த சந்திப்பில் பிரயோசனமில்லையென தவிர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன..


இதனை உறுதி செய்யும் வகையில் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் இவ்வாறு அறிவித்துள்ளதுடன், கூடிக் கலையும் பயனற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதில் உடன்பாடில்லையென தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment