நாளை 13ம் திகதியுடன் பதவி விலகுவதாக அறிவித்து, தலைமறைவாக உள்ள கோட்டாபய ராஜபக்ச, இராஜினாமா கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாளைய தேதியிடப்பட்ட குறித்த கடிதம் தயாராகவுள்ள நிலையில், இந்த அறிவிப்பை சபாநாயகர் 'வாசிப்பார்' என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ராஜபக்ச குடும்பம் ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டு கிளம்புவதற்கான ஆயத்தங்கள் இருந்த போதிலும் அதில் பல தடைகள் தோன்றியிருப்பதாகவும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது. ஏலவே பசில் ராஜபக்ச இன்று விமான நிலையத்தில் தடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment