கடவுச்சீட்டு பெறுவதற்கு மக்கள் பாரிய அளவில் முண்டியடித்து வரும் நிலையில், தனது கடவுச்சீட்டைப் பெறுவதற்கு அதிகாலையிலேயே வரிசையில் காத்திருந்த பெண்ணொருவருக்கு குழந்தை பிரசவம் இடம்பெற்ற சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
வலியால் துடித்த பெண்ணுக்கு இராணுவத்தினர் உதவ முயன்று கொண்டிருந்த நிலையில் பிரசவம் நிகழ்ந்துள்ளதாகவம் தாயும் சேயும் காசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹற்றன் பகுதியிலிருந்து வந்திருந்த கர்ப்பிணிப் பெண் இரு தினங்களாக கடவுச்சீட்டைப் பெற காத்திருந்ததாகவும் இன்று காலை 7 மணியளவில் பிரசவம் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment