மாலைதீவு சென்றடைந்திருந்த கோட்டாபய ராஜபக்சவை பிறிதொரு நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு முதலில் இணங்கியிருந்த இந்திய விமான சேவை நிறுவனங்கள் இறுதி நேரத்தில் தமது சேவையை வழங்க மறுத்துள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய மாலைதீவில் தங்கியிருக்க முடியாத சூழ்நிலை உருவாகியதன் பின்னணியில் தனியார் விமான சேவைகளைப் பெற்று வேறு இடத்துக்கு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே, இவ்வாறு இந்தியா கைவிட்டுள்ளதுடன் அதன் பின்னணியில் இந்திய அரசியல் தொடர்பு பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர், சிங்கப்பூர் சென்ற கோட்டா தொடர்பில் தகவல் அறியும் ஆர்வம் அதிகரித்திருந்த நிலையில், அங்கு அவர் தனிப்பட்ட விஜயம் நிமித்தமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அறிவித்திருந்தமையும் ஆபிரிக்க நாடொன்றில் ராஜபக்ச குடும்பம் புகலிடம் தேடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment