சிங்கப்பூர் சென்றடைந்த கோட்டாபய ராஜபக்ச, அங்குள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக தனது இராஜினாமா கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளதையடுத்து கோட்டா பதவி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார் சபாநாயகர்.
இந்நிலையில், சம்பிரதாய அடிப்படையில் ரணில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ள அதேவேளை, ஒரு வாரத்துக்குள் புதிய ஜனாதிபதியொருவரை நாடாளுமன்றம் ஊடாக தேர்ந்தெடுக்கவுள்ளதாக சபாநாயகர் விளக்கமளித்துள்ளார்.
இப்பின்னணியில், நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் இன்று கட்சித் தலைவர்கள் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment