பசில் ராஜபக்சவினால் விட்டுச் செல்லப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தொழிலதிபர் தம்மிக்கவுக்கு வழங்கியதை எதிர்த்து அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் யாப்பின் 99ஏ பிரிவின் படி, தேர்தல் காலத்தில் மாவட்ட மட்டத்தில் பெயர் உள்ளடக்கப்படாத யாருக்கும் தேசியப்பட்டியல் ஊடாக நியமனம் வழங்க முடியாது எனும் அடிப்படையில் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு வேறு வர்த்தகங்களில் உள்ள நபருக்கு அமைச்சு பதவியை வழங்குவது தொடர்பிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment