மைத்ரிக்கு எதிராக ரதன தேரர் CIDயில் முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Thursday, 23 June 2022

மைத்ரிக்கு எதிராக ரதன தேரர் CIDயில் முறைப்பாடு

 



தனது பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் மரண தண்டனைக் கைதியொருவருக்கு பொது மன்னிப்பு வழங்கிய விடயம் தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் விளக்கமளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அத்துராலியே ரதன தேரரின் அழுத்தத்திற்காகவே தான் கையொப்பமிட்டதாக தெரிவித்துள்ளார்.


குறித்த விடுதலையின் பின்னணியில் கோடிக்கணக்கான ரூபா பணப்பரிமாற்றம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுவதாகவும், குடும்பத்தினர் 'யாருக்கோ' பணம் கொடுத்திருப்பதாகவும் அது தனக்கு தெரியாத விடயம் எனவும் அவர் மேலதிக விளக்கமளித்திருந்த நிலையில் இன்று மைத்ரிபாலவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறையிட்டுள்ளார் ரதன ஹிமி.


மைத்ரியின் 'பேச்சு' பணத்தைப் பெற்றது தாமே என்ற வகையில் அமைந்துள்ளதாகவும் அதனை விசாரித்து விளக்கமளிக்குமாறு கோரியுமே ரதன தேரர் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment