மஹிந்த ராஜபக்ச கடுமையான சுகயீனம் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை முதல் பரவி வரும் தகவலை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.
மே 9 வன்முறையின் பின்னர் தலைமறைவாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ச, பொது நிகழ்வுகளைத் தவிர்த்து வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நலன் குறித்து அவ்வப்போது தகவல்கள் பரவி வருகின்றன.
இப்பின்னணியில், இன்றைய தினம் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவருடைய செயலாளர் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment