வரலாறோ, கலாச்சாரமோ தெரியாத கோட்டாபய ராஜபக்சவை கழுத்தை பிடித்து வெளியே தள்ள வேண்டியேற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.
எந்தவொரு அமைதி வழிப் போராட்டத்தினாலும் கோட்டாபயவை விரட்ட முடியாது எனவும் ஒரு போதும் அவர் விலகப் போவதில்லையெனவும் தெரிவிக்கின்ற மேர்வின் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும் என்கிறார்.
மே 9 வன்முறையைத் தூண்டிய பின்னணியிலும் ஜனாதிபதிக்கு தொடர்பிருப்பதாக மேர்வின் நேற்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment