பசிலின் 'பில்லியன்களுக்கான' திட்டங்கள் ரத்து - sonakar.com

Post Top Ad

Sunday, 5 June 2022

பசிலின் 'பில்லியன்களுக்கான' திட்டங்கள் ரத்து

 



நிதியமைச்சராக பதவி வகித்த குறுகிய காலத்தில் பசில் ராஜபக்ச முன் வைத்த பல பில்லியன்கள் செலவாகும் இரு திட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.


தலா 4 மில்லியன் ரூபா விகிதம் ஒவ்வொரு அரச பிரிவுகளுக்கும் ஒதுக்கப்பட்ட 19.6 பில்லியன் ரூபா திட்டமும், கிராம அபிவிருத்திருக்காக பசில் திட்டமிட்ட 85 பில்லியன் ரூபா செலவுக்கான திட்டமுமே நிதியமைச்சினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.


பசில் ராஜபக்ச நிதியமைச்சரானதும் 'அனைத்து' கஷ்டங்களும் தீர்ந்து விடும் என பிரச்சாரம் செய்யப்பட்டிருந்த அதேவேளை முழுக்கவும் வெளிநாட்டுக் கடனில் தங்கியிருந்த இலங்கை பொருளாதாரம் தற்போது அதாள பாதாளத்தில் வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment