தனக்குக் கிடைக்கப் பெற்ற நாடாளுமன்ற பதவியிலிருந்து விலகிக் கொண்டுள்ள பசில் ராஜபக்ச, இனி அங்கு செய்வதற்கு ஒரு வேலையும் இல்லையென விளக்கமளித்துள்ளார்.
பெரமுன வெற்றி பெற்றிருந்த போதிலும், முதலில் தாம் பதவி எதையும் ஏற்றுக் கொள்ளவில்லையெனவும், நிதியமைச்சைப் பொறுப்பேற்கும் நிமித்தமே நாடாளுமன்ற உறுப்பினரானதாகவும் தெரிவிக்கும் அவர், இனி அங்கு தனக்கு எந்த 'வேலையும்' இல்லையென்கிறார்.
பசில் ராஜபக்ச வந்ததும் பொருளாதார சூழ்நிலை தலைகீழாக மாறும் எனவும் அவரே நாட்டைக் கட்டியெழுப்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டு வந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment