ரஷ்ய விமானத்தை வெளியேற அனுமதித்து, ரஷ்யாவுடனான நல்லுறவைப் பாதுகாக்கக் கோரி கொழும்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ரஷ்ய விமான நிறுவனம் மற்றும் அயர்லாந்து நிறுவனம் ஒன்றுக்கிடையிலான வழக்கின் பின்னணியில் வணிக நீதிமன்றின் உத்தரவுக்கடைய குறித்த விமானம் தடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரஷ்யா தமது எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன் கொழும்புக்கான விமான சேவையையும் இரத்து செய்துள்ளது.
எனினும், தற்போது சட்டமா அதிபர் விமானத்தை புறப்பட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment