மே 9 வன்முறைகளின் பின்னணியில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபரை 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிராயுதபாணிகளான போராட்டக்காரர்கள் மீது மஹிந்தவை சந்தித்து விட்டு வந்த வேகத்தில் பெரமுன காடையர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இச்சம்பவத்தின் பின்னணியில் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாக்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது இணைப்புச் செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், மஹிந்த ராஜபக்ச எதிலும் 'தொடர்பில்லாத' நபராகவே தனது அரசியலை திட்டமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment