இலங்கையில், தன்னையொரு அரசியல் சண்டியனராக நிறுவிக் கொண்ட ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, தனது கைதைத் தடுக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மே 9 வன்முறைகளின் பின்னணியில் ஜோன்ஸ்டன் தேடப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த நபர் தற்போது தனது சட்டத்தரணியூடாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கோட்டா-கோ-கம மற்றும் மைனா-கோ-கம போராளிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்த மஹிந்த சகாக்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் ஜோன்ஸ்டன் தலைமறைவாகியுள்ளமையும், வன்முறைக்கு முன்பாக, குருநாகலில் தனது கூலிப்படையினரைக் கொண்டு, பொது மக்களுக்கு ஜோன்ஸ்டன் சவால் விடுத்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment