விபத்து தவிர்ப்பு; ஸ்ரீலங்கன் விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Wednesday 15 June 2022

விபத்து தவிர்ப்பு; ஸ்ரீலங்கன் விளக்கம்!

 



லண்டனிலிருந்து கொழும்பு பயணித்த ஸ்ரீலங்கன் விமானம் பாரிய விபத்தொன்றிலிருந்து தப்பியதாக பரவி வரும் தகவலுக்கு விளக்கமளித்துள்ளது ஸ்ரீலங்கன் விமான சேவை.


துருக்கி வான்பரப்பில் ஏற்படவிருந்ததாக தெரிவிக்கப்படும் குறித்த விபத்தினை, ஸ்ரீலங்கன் விமானியின் துல்லியமான கணிப்பினால் தவிர்க்க முடிந்ததாகவும், துருக்கி வான் பரப்புக் கட்டுப்பாட்டகம் 35,000 அடி உயரத்தில் பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம் பறப்பதை அவதானிக்கத் தவறி, ஸ்ரீலங்கனை அந்த உயரத்தில் பறக்குமாறு கட்டளையிட்டதே குழப்பம் எனவும், ஸ்ரீலங்கன் விமானி அதனைத் தவிர்த்ததுடன் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த ராடார் துணையுடன் ஆபத்தைக் கணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


துருக்கியின் அறிவுறுத்தலை ஏற்றிருந்தால் பாரிய விபத்தொன்று ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்பிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment