கொழும்பு துறைமுக நகரம் தம்மிக வசம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 28 June 2022

கொழும்பு துறைமுக நகரம் தம்மிக வசம்

 


 

கொழும்பு துறைமுக நகர வர்த்தக ஆணைக்குழு மற்றும் குறித்த நிலப்பகுதியின் திட்டங்கள் அனைத்தும் புதிதாக அமைச்சு பதவியேற்ற தம்மிக பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


துறைமுக நகர நிதி விவகாரங்கள்  பிரத்யேகமாக கையாளப்படுவதற்கு ஏதுவாக ஏலவே சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், சூதாட்டம் அங்கு பாரிய முதலீடாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், தம்மிகவிடம் முதலீட்டு சபை, துறைமுக நகரம், குடிவரவு - குடியகல்வு திணைக்களம், தாமரை கோபுர நிர்வாகம் உள்ளிட்ட ஏழு முக்கிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment