அமைச்சர்களின் ஒரு வருட சம்பளம் 'தியாகம்' - sonakar.com

Post Top Ad

Tuesday 7 June 2022

அமைச்சர்களின் ஒரு வருட சம்பளம் 'தியாகம்'




நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையின் பின்னணியில் அமைச்சர்கள் ஒரு வருடத்துக்கு தமது சம்பளத்தை தியாகம் செய்யப் போவதாக தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.


அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இன்று இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.


தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யாது விலகப் போவதில்லையென ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்த நிலையில், அமைச்சரவை ஒரு வருட காலத்துக்கு சம்பளமில்லாமல் 'சேவை' செய்யப் போவதாக தெரிவிக்கின்றமையும் மக்கள் தொடர்ந்தும் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment