இந்தியாவினால் வழங்கப்பட்ட 700 மில்லியன் டொலர் எரிபொருள் கடனைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ள இறுதி எரிபொருள் கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது.
நாட்டின் பல பாகங்களில் எரிபொருள் வேண்டி போராட்டம் இடம்பெற்று வருவதோடு வரிசையில் காத்திருந்தோர் மரணித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தற்போது வந்துள்ள கப்பலிலுள்ள எரிபொருள் எதிர்வரும் மூன்று தினங்களில் விநியோகத்துக்குத் தயாராகும் என தெரிவிக்கப்படுவதுடன் இதில் 40,000 மெ.தொன் டீசலே உள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment