அடுத்து வரும் மூன்று வாரங்களுக்கு மக்கள் கடினமான சூழ்நிலைக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அதற்குத் தயாராகுமாறும் எச்சரிக்கிறார் குழப்ப கால பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
150 மில்லியன் டொலர் பெறுமதியான உணவுப் பொருட்களும், விவசாய உற்பத்தியைக் கருத்திற் கொண்டு 600 மில்லியன் டொலர் பெறுமதியான உர வகைகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறும், தேவைக்கு அதிகமாக எரிபொருளை பெற்றுக் கொள்ளாதிருக்குமாறும் விளக்கமளித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் வீழ்ந்துள்ள போதிலும், தொடர்ந்தும் பெரமுன அரசாங்கமே ஆட்சி செய்கின்றமையும் ஜனாதிபதி பதவி விலக மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment