வருடத்துக்கு ஒரு பில்லியன் டொலர்; தம்மிக்கவின் திட்டம் - sonakar.com

Post Top Ad

Monday, 13 June 2022

வருடத்துக்கு ஒரு பில்லியன் டொலர்; தம்மிக்கவின் திட்டம்

 



வருடாந்தம் ஒரு பில்லியன் டொலர் விகிதம், ஐந்து வருடங்களில் ஐந்து பில்லியன் டொலர் கையிருப்பை உருவாக்குவதற்கு திட்டமொன்றை முன் வைத்துள்ளார் தம்மிக பெரேரா.


இலங்கை வங்கியொன்றில் ஒரு லட்சம் அமெரிக்க டொலரை  பத்து வருடங்களுக்கு வைப்பிலிடக்கூடிய ஒருவருக்கு பத்து வருடங்களுக்கான வதிவிட விசா வழங்குவதன் ஊடாக இதனை இலகுவாக சாதிக்க முடியும் என அவர் விளக்கமளித்துள்ளார். இப்பின்னணியில், 50,000 வதிவிட விசாக்கள் வழங்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், தற்போது வழங்கப்படும் ஒரு மாத கால சுற்றுலா விசாவுக்கு பதிலாக ஆறு மாத விசா வழங்குவதன் ஊடாக 450 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் அதிகரிக்கும் எனவும், தனியார் பல்கலைக் கழகங்களை அதிகரிப்பதன் ஊடாக, இலங்கையிலிருந்து வெளி நாடுகளுக்கு கல்விக்காக செல்லும் மாணவர்கள் செலவு செய்யும் தொகையை 20 வீதத்தால் குறைத்து, நாட்டுக்குள் வெளிநாட்டு மாணவர்களைக் கவர முடியும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.


இவ்வாறு 12 அம்ச திட்டங்களை அவர் முன் வைத்துள்ள அதேவேளை, பெரும்பாலானவை அடைவுக்கான சாத்தியமற்றவை என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


No comments:

Post a Comment