ரஷ்யாவின் தேசிய விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
எனினும், அது இரு அரசாங்கத்தின் பிரச்சினையில்லை, மாறாக தனிப்பட்ட இரு நிறுவனங்களுக்கிடையிலான பிரச்சினையென விளக்கமளித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அயர்லாந்து நிறுவனம் ஒன்று வர்த்தக நீதிமன்றம் ஊடாக தொடர்ந்த வழக்கின் பின்னணியில் விமானம் ரஷ்யாவுக்குத் திரும்பிச் செல்வது தடுக்கப்பட்டுள்ள அதேவேளை இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் ஏலோப்லொட் ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment