21ம் திருத்தச் சட்டத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிப்பதானால், நிறைவேற்று அதிகாரம் முற்றாக நீக்கப்பட்டு நாடாளுமன்ற அதிகாரம் பலப்படுத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கப்பட்டமையை எதிர்த்து உதயங்க வீரதுங்க முதல் பெரமுன பக்தர்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு எதிராக கருத்து வெளியிட்டு வரும் நிலையில், மஹிந்த ராஜபக்ச தரப்பிலிருந்து இவ்வாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் வேண்டும் என்று 18 மற்றும் 20ம் திருத்தச் சட்டங்களூடாக அதனை மஹிந்த ராஜபக்சவே சாதித்துக் கொண்டமையும் அதற்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment