இன்றைய தினம் இதுவரை இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரழந்துள்ளனர்.
முன்னதாக மொரகல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 வயது நபர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாணந்துறையில் இரண்டாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது சம்பவத்தில் 31 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment