கடவுச்சீட்டினை ஒரே நாளில் பெறுவதற்கு பெருமளவு கிராக்கி நிலவுவதால் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழமையான சேவையூடாக 14 நாட்களில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியுமாயினும் கூட 15,000 ரூபா கட்டணம் செலுத்தி ஒரே நாளில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கே மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment