வெளிநாட்டு கடவுச்சீட்டுகளில் இலங்கை பயணிப்போருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டாய காப்புறுதித் திட்டம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 அமெரிக்க டொலர் கட்டணம் அறவிடப்பட்டு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டு வந்த குறித்த காப்புறுதி இது வரை கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
தற்போது, கொரோனா பரவல் வீச்சு வெகுவாக குறைந்துள்ள நிலையில், முகக் கவசம் அணிவதற்கான கட்டாயமும் அண்மையில் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment