எரிபொருள் பெறுவதற்காக இரு தினங்களாக வரிசையில் காத்திருந்த 42 வயது நபர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பண்டாரகமயைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர், தனது முச்சக்கர வண்டிக்கு எரிபொருளைப் பெறுவதற்காக நித்திரையின்றி காத்திருந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி உக்கிரமடைந்து வருகின்ற அதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment