இரு மாதங்கள் இடைக்கால ஆளுனராக பணியாற்றும் நோக்கில் தான் வரவில்லையெனவும் ஆறு வருடங்கள் முழுமையாகப் பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் விஜேசிங்க.
ஒரு வருடத்திற்கு முன்பாகவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால், தற்போதைய சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது எனவும் தெரிவிக்கின்ற அவர், இவ்வருடம் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதியுதவி தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் வாரம், சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கை வந்து நேரடி பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment