கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி துறை தவிர்ந்த ஏனைய பொது சேவை ஊழியர்களுக்கு, எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது சேவை ஊழியர்களை விவசாய நடவடிக்கைகளில் ஊக்குவிப்பதற்காக இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது சேவையில் உள்ளவர்களுக்கு ஐந்து வருடங்கள் 'ஊதியமற்ற' விடுமுறையூடாக வெளிநாடுகளுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும், பதவிகளை பெற்றுக்கொண்டதும் அரசியல்வாதிகள் வகை தொகையின்றி தமது தொண்டர்களுக்கு பொது சேவை நியமனங்களை வழங்குவதையே பிரதான காரியமாக செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment