இலங்கையின் 'கடன்' கோரிக்கையை நிராகரித்த சவுதி - sonakar.com

Post Top Ad

Monday, 13 June 2022

இலங்கையின் 'கடன்' கோரிக்கையை நிராகரித்த சவுதி

 



பொருளாதார சிக்கலிலிருந்து மீள்வதற்கு உலகமெங்கும் கடன் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் முயன்று வரும் நிலையில், மாலைதீவு ஊடாக சவுதியிடம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.


திடமான திட்டமொன்று இல்லையென்றால் இலங்கை விவகாரத்தைப் பற்றி பேசவே வேண்டாம் என சவுதி முடிக்குரிய இளவரசர் முஹமத் பின் சல்மான் தெளிவாக தெரிவித்துள்ளதாக ஹர்ஷ டிசில்வா தகவல் வெளியிட்டுள்ளார்.


இதேவேளை, தாம் வழங்கி வரும் உதவிகளுக்கும் மேலாக இன்னும் ஏன் இலங்கை கடன் பெற முயற்சிக்கிறது என இந்திய தரப்பும் கேள்வியெழுப்பியுள்ளதாக ஹர்ஷ சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment