நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் பின்னணியில், பிரதேசத்தில் உள்ள பாவனையாளர்களை பதிவு செய்து, குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவர்களுக்கு வாராந்த கோட்டா நிர்ணயம் செய்வதைத் தவிர வேறு வழியில்லையென்கிறார் எரிபொருள் அமைச்சர் காஞ்சன.
பொருளாதார சிக்கலின் உச்சத்தில் இருக்கும் இலங்கை, உலக நாடுகளிடம் கடன் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனற்றுப் போயுள்ள நிலையில், தொடர்ந்தும் மாற்று வழிகள் ஆராயப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எரிபொருள் பிரச்சினைக்கு தற்காலிகமான தீர்வாக இவ்வாறு ஒரு பதிவு முறைமையை அறிமுகப்படுத்துவதாக அமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment