கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட அசம்பாவிதங்களின் பின்னணியில் அதிகாலையளவில் 600 கைதிகள் தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.
நேற்றிரவு தடுப்புக் கைதியொருவர் மரணித்ததன் பின்னணியில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையிலேயே இவ்வாறு 600 பேர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து நிலைமையை சமாளிக்கும் நடவடிக்கையிலும் தப்பியோடியவர்களை பிடிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment