21ம் திருத்தச் சட்டத்தை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதால் அதற்குப் பகரமாக 22ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணங்கியுள்ளது.
சமகி ஜன பல வகய தரப்பில் முன் வைக்கப்பட்டிருந்த 21ம் திருத்தச் சட்ட வரைபினை அமுல்படுத்த மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பும் அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது 22ம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
21ம் திருத்தச் சட்டம் ஏலவே கசற் செய்யப்பட்டு விட்டதால், புதிய சட்டத்திருத்தம் 22 வதாக அறியப்படும் என நீதியமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment