21ம் திருத்தச் சட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதனைக் கடுமையாக எதிர்த்து வரும் பசில் ராஜபக்ச, தமது ஆதரவாளர்கள் இருபது பேருடன் சென்று ரணில் விக்கிரமசிங்கவிடம் இது பற்றி கேள்வியெழுப்பியுள்ளார்.
ரணில் மற்றும் விஜேதாச ராஜபக்ச கலந்து கொண்ட இச்சந்திப்பில் தம் பக்கம் இருக்கும் 20 பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்ற பசில், 21ம் திருத்தச் சட்டத்தின் மூலகர்த்தா யார்? என கேள்வியெழுப்பியுள்ளார்.
பசில் தரப்பின் எதிர்ப்பையும் மீறி 21ஐ வெற்றி பெறச் செய்வது கடினமாகி வருவதுடன் தற்போதைய வரைபை எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகவும் மாற்றக் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment