இவ்வருடம் செப்டம்பர் 20 முதல் எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 20ம் திகதிக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறது தேர்தல் ஆணைக்குழு.
மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் பதவிக் காலம் ஏலவே ஒரு வருடம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்திட்டங்களுக்கமைவாக தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் தேர்தல் 'நாடி' பிடிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment