கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்சவையும் பதவி விலகக் கோரி மக்கள் நடாத்தி வந்த அமைதிப் போராட்டத்தை வன்முறை பூமியாக மாற்ற முனைந்த மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன காடையர்களை மக்கள் சிறைப்பிடித்துள்ளனர்.
போராட்டத்தைக் கலைத்து தமது பதவிகளைத் தக்க வைப்பதற்கு ராஜபக்ச குடும்பத்தினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் மீளெழுச்சி இடம்பெற்று வருகிறது.
மஹிந்த இன்று பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரமுன காடையர்கள் இவ்வாறு வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருந்தமையும், மஹிந்தவை சந்தித்த பின்னரே வன்முறை ஆரம்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment