பேச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக அறிவித்துள்ளமை குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார் சஜித் பிரேமதாச.
இரு தரப்பும் 'பேச்சுவார்த்தை' நடாத்திக்கொண்டிருந்த நிலையில், தாம் முன் வைத்த முக்கிய கோரிக்கை, மக்களின் எதிர்பார்ப்பை ஒத்தது எனவும் ஜனாதிபதி எப்போது பதவி விலகுவார் என்பது விளக்கப்பட வேண்டும் என்பதே தனது முக்கிய நிபந்தனையாக இருந்ததாகவும் சஜித் மேலும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, மோசடியான முறையில் இச்சூழ்நிலை கையாளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர் எதிர்க்கட்சி சார்பில், ஜனாதிபதி பதவி விலகாத வரை அமைச்சரவைக்கு யாரையும் தரப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment