கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்து கொண்டு யார் அரசமைத்தாலும் ஒரு மாத காலம் கூட நீடிக்கப்பட முடியாது என தெரிவிக்கிறது ஜே.வி.பி.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் போராட்டம் ஆரம்பித்திருந்த நிலையில் தொடர்ந்தும் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவே ஜனாதிபதி முயன்று வருகிறார்.
இந்நிலையில், தற்போது ஜனாதிபதி பதவி விலகுவதற்கான இணக்கப்பாட்டுடன் அரசமைக்க சஜித் சம்மதம் தெரிவித்துள்ளமையும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க எதிர்ப்புக் கிளம்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment