கடந்த இரு தசாப்தங்களாக இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் தொடர்பில் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட தகவல்களில் தனது பெயரும் இணைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டியுள்ளார் யோசித ராஜபக்ச.
தனது அலுவலகம் ஊடாக இந்த மிரட்டலை விடுத்துள்ள அவர், முறைகேடான முறையில் தான் கையகப்படுத்தியதாகக் கூப்படும் காணி விவகாரம் பொய்யானர் எனவும் அநுர குமார முன் வைத்த ஆவணங்கள் போலியானவை எனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, அமெரிக்காவில் இலங்கை தொடர்பிலான 'தோற்றப் பாட்டை' மாற்றுவதற்கு அமெரிக்க அரசியல்வாதியொருவருக்கு 6.5 மில்லியன் டொலர் பணம் கொடுத்த விவகாரமும் அரசினால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் தனி நபர் உத்தரவில் வழங்கப்படவில்லையெனவும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் கபரால் மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment