நிராயுதபாணிகளாக காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பெரமுன காடையர்கள் தாக்குவதற்கு வழி கொடுத்த டி.ஐ.ஜி தேசபந்துவை தாக்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இரு நபர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
மக்களைத் தாக்க அனுமதியளித்தது யார்? எனக் கேட்டு டி.ஐ.ஜியை மக்களே தாக்கியிருந்தனர். இதில் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர்களை நாளை 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிசாரின் ஒத்துழைப்புடனேயே போராளிகள் மீது பெரமுன காடையர்கள் தாக்குதல் நடாத்தியிருந்ததற்கான ஆதாரங்கள் பரவலாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment