நேற்றைய தினம் பெரமுன வன்முறையாளர்களுடன் இணைந்து காணப்பட்ட சிரேஷ்ட டி.ஐ.ஜி தேசபந்த தென்னகோன் கொழும்பு, கங்காராம பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
இனந்தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து கூட்டத்தைக் கலைக்க வான் நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான குறித்த நபர், நேற்றைய தினம் பெரமுன காடையர்களை தடுக்கத் தவறியதாக சமூக வலைத்தளங்களில் பரவலான குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment