மே 9 வன்முறையின் பின், குற்றவியல் விசாரணை பிரிவில் ஆஜராகிய ஜோன்ஸ்டன் பெர்னான்டோ இன்று ஐந்து மணி நேரம் வாக்குமூலமளித்துள்ளார்.
இந்நிலையில், அங்கு குழுமிய கோட்டா கோ ஹோம் போராளிகள் ஜோன்ஸ்டனை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னணியில் வீதித் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர் பொலிசார்.
எனினும், அதனையும் மீறி மக்கள் பெருமளவு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் மே 9 வன்முறையின் சூத்திரதாரிகளுள் ஒருவராக ஜோன்ஸ்டன் மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment