ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று வைத்திருந்த நிதியமைச்சு இன்று ரணிலிடம் கை மாறியுள்ளது.
மக்கள் போராட்டத்தின் பின்னணியில் அமைச்சரவை கலைக்கப்பட்டிருந்த இடைக்காலத்தில் நிதியமைச்சு அலி சப்ரியிடம் இருந்ததோடு நீதியமைச்சும் அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் நிதியமைச்சு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பாரிய அளவில் உருவான எதிர்ப்பினையடுத்து தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment