மஹிந்த ஆதரவு நகர சபை உறுப்பினர் அரை நிர்வாணம்! - sonakar.com

Post Top Ad

Monday, 9 May 2022

மஹிந்த ஆதரவு நகர சபை உறுப்பினர் அரை நிர்வாணம்!

 



புறக்கோட்டையில் தொழிற்சங்கவாதியாக அறியப்பட்டு, பல்வேறு ஊழல்களில் தொடர்பு பட்ட மஹிந்த ராஜபக்ச ஆதரவு நகர சபை உறுப்பினர் மஹிந்த கஹ்நதகமவை பொது மக்கள் அரை நிர்வாணப்படுத்தி வீதியில் விட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.


மஹிந்த ஆதரவு பெரமுன கூட்டத்தை ஒழுங்கு படுத்தியதில் முக்கிய நபரான குறித்த ஊழல் பேர்வழி மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திரும்பத் தருமாறு தாக்குதல்தாரிகள் கோசமிட்டிருந்தனர்.


இந்நிலையில், தனக்கு மூச்சடைப்பு ஏற்படுவதாகக் கூறி மேலதிக தாக்குதலிலிருந்து கஹந்தகம தப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment