வீட்டை முற்றுகையிட எத்தனிக்கிறார்கள்: ரணில்! - sonakar.com

Post Top Ad

Friday, 6 May 2022

வீட்டை முற்றுகையிட எத்தனிக்கிறார்கள்: ரணில்!

 



பிரதி சபாநாயகர் தெரிவில் ரஞ்சித் சியம்பலபிட்டியவை ஆதரித்து வாக்களித்ததன் பின்னணியில் தனக்கெதிராகவும் போராட்டம் நடாத்த திட்டமிடப்படுவதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.


ரஞ்சித்துக்கு ஆதரவு கோரி பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் பேச்சுவார்த்தை நடாத்தியதாக சாணக்கியன் தகவல் வெளியிட்டதையடுத்து தனது வீடு முற்றுகையிடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ரணில் தெரிவிக்கிறார்.


எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிப்பதே தமது திட்டம் எனவும் அரசோடு எந்த டீலும் இல்லையெனவும் ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment