ஜனாதிபதியை பதவி விலகக் கோரும் 'கோட்டா கோ ஹோம்' போராட்டம் சர்வதேச மட்டத்தில் விரிவடைந்துள்ள போதிலும், மக்கள் தொடர்ந்தும் அரசினை ஆதரிப்பது நிரூபணமாகியுள்ளதாக தெரிவிக்கிறார் பிரதமர் பதவியை எதிர்பார்க்கும் தினேஷ் குணவர்தன.
நுகேகொடயில் இடம்பெற்ற பெரமுன மே தினக் கூட்டத்தில் திரண்ட மக்கள் இதற்குச் சான்று பகிர்வதாகவும் சிறிது காலம் அரசு தொடர்பில் மக்களிடம் மாற்றுக் கருத்து இருந்த போதிலும் தற்போது மீண்டும் மக்கள் நம்பிக்கையை அரசு வென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
தினேஷ் உட்பட நால்வரோரு பிரதமர் பதவிக்கான பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment