பசில் ராஜபக்ச என்பது வேஷ்டி - சால்வை உடுத்த ரணில், ரணில் விக்கிரமசிங்க என்பது கோர்ட் - சூட் போட்ட பசில் என்கிறார் விமல் வீரவன்ச.
இந்நிலையில், ரணிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிர்வாகத்தில் தமது கூட்டணி பங்கேற்கப் போவதில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏலவே பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய புதிய அமைச்சரவையில் இணையப் போவதில்லையென தெரிவித்துள்ள அதேவேளை, பெரமுனவினர் ரணிலை ஆதரித்து பதவிகளை நிரப்பிக் கொள்ள பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment