ஜனாதிபதியையும் பிரதமரையும் பதவி விலகக் கோரி பொது மக்கள் அமைதியாக முன்னெடுத்து வரும் போராட்டக் களமான கோட்டா கோ கம மீது பொதுஜன பெரமுன காடையர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
32 நாட்களாக போராட்டம் தொடரும் நிலையில், பிரதமருடன் சந்திப்பொன்றை நடாத்தி விட்டு வெளியே வந்த பெரமுன காடையர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
பொலிசாரினால் 'பெரமுன' காடையர்களை கட்டுப்படுத்த முடியாது போனதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தில் காயமடைந்து ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment