அரசியல் தெரியாத தன்னை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்த மஹிந்த ராஜபக்சவை அவமதித்து விரட்டிய கோட்டாபய ராஜபக்சவுக்கு சாபமிட்டுள்ளார் குடும்ப உறுப்பினரும் முன்னாள் ரஷ்யாவுக்கான தூதருமான உதயங்க வீரதுங்க.
நல்லாட்சியென்ற பேரில் மஹிந்த ராஜபக்சவுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் புறந்தள்ளி, கோட்டாபய ராஜபக்ச இன்று நடந்து கொண்டுள்ள விதத்தினை தன்னுடைய பெரியம்மா உயிரோடிருந்தால் சபித்திருப்பார் எனவும் உதயங்க தெரிவிக்கிறார்.
மஹிந்தவை விலக்கியது மனித விரோத செயற்பாடு எனவும் அதற்கான வினையை கோட்டாபய அனுபவிப்பார் எனவும் உதயங்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment