குருநாகலயில் குண்டர் படைகளைத் தாண்டி தம்மை அசைக்க முடியாது என்று கூறி வந்த ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் வாகனம் ஒன்று இன்று கொழும்பில் பொது மக்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் ஏரியில் வீழ்த்தப்பட்டுள்ளது.
ராஜபக்ச ஆதரவாளர்கள் என்ற பேரில் கொழும்பில் களமிறங்கிய பொதுஜன பெரமுன காடையர்களை ஏற்றி வந்த வாகனங்கள் தொடர்ந்தும் பல இடங்களில் தாக்குதலுக்குள்ளாகி வருவதுடன் மக்கள் பேரெழுச்சி கண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜோன்ஸ்டனுடைய படையணிக்குச் சொந்தமான வாகனம் இவ்வாறு மக்களால் ஏரிக்குள் தள்ளி விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment